இலங்கையின் முதியோர் பாதுகாப்பு


සක්‍රීය  වැඩිහිටි වියක් උදෙසා


எம்மைப் பற்ற

இலங்கைச் சமுதாயத்திற் காணப்படும் விரிவுபடுத்தப்பட்ட குடும்பக் கலாசாரத்தினூடாக இந்நாட்டின் பெற்றோர் – பிள்ளைகள் தொடர்பிலான நெருங்கி ஆழத்தினை நேரடியாகக் காணக்கூடியதாகவுள்ளதுடன், அதனூடாக இலங்கையில் பெருமைகொள்ளக்கூடிய உறவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவ்விரிவுபடுத்தப்பட்ட குடும்பத் திட்டத்தின் உன்னத அம்சம் என்னவெனில், அவ்வாறான குடும்பத்தில் சகல அங்கத்தவரும் முன்பிள்ளைப் பருவத்திலிருந்து முதுமை வரை பாதுகாப்பான வாழ்க்கையினை அனுபவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் மிகவும் முதுமையடைந்த பெண்களை உயர்ந்த நபர்களாக கவனத்திற் கொண்டு சிரேஸ்ட பெருமையினை எடுத்துக் காட்டுதல், விரிவுபடுத்தப்பட்ட குடும்ப எண்ணக்கருவினுள் இடம்பெற்றுள்ளது. பொதுவாக, முதுமையடைந்தன் பின்னர் தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு சமூக ஒழுக்க விழுமியங்கள் தொடர்பிலான புரிந்துணர்வினை வழங்கி தனது வாழ்க்கையின் மீதிக் காலத்தினை ஓய்வாக கழிக்கும் வாய்ப்பு முதியோர்களுக்கு உரித்தாகின்றது. இலங்கை சுமார் முப்பது ஆண்டுகளாக யுத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன் அதனுடாக இந்நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாசாரக் கோணங்களில் பாரிய தாக்கத்தினை விளைவித்துள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.இதன் தவிர்க்க முடியாத பின்விளைவொன்றாக முதியோர் சனத்தொகை தொடர்பில் சமூகத்தின் கவனம் விலகிச் சென்று அவர்கள் தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் அவர்களின் நலன்புரி குறைக்கப்படுவதற்கும் நேரிட்டுள்ளது. இந்நிலைமையினைக் காரணமாகக் கொண்டு தற்போது முதியோர்களைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்குப் போசாக்கான உணவுகளை வழங்குதல் தொடர்பில் சில பிரச்சினைகள் காணப்படுவதுடன், அரசு, தனது அபிவிருத்திப் பணிகளுக்கு நிகராக முதியோர் நலன்புரி தொடர்பில் அதிக நிதியினைச் செலவு செய்கின்றது.

உலகில் முதியோர் சனத்தொகை துரிதகதியில் அதிகரித்து வரும் இத்தருணத்தில், இலங்கையிலேயே முதியோர் சனத்தொகையானது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உயர் மட்டத்தில் காணப்படுகின்றது. புதிய புள்ளி விபரத் தரவுகளின் பிரகாரம் இலங்கையின் முதியோர் சனத்தொகை 2,520,573 ஆவதுடன், அது சதவீதத்தில் மொத்த சனத்தொகையின் 12.38% ஆகும். முதியோர்கள் தமது வாழ்க்கையினை எவ்வேளையிலும் மகிழ்ச்சியுடனும், ஓய்வுடனும் கழிப்பதற்குத் தேவையான பின்னணியினைத் தயாரிக்கும் நோக்கினைத் தொலை நோக்காகக் கொண்டு, அரச மற்றும் தனியார் பிரிவின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்ளும் முகமாக, முதியோர் நலன்புரி மற்றும் பங்களிப்பினை உறுதிப்படுத்துவதற்கு நாம் பாரிய பணிப்பொறுப்பினை முன்னெடுத்து வருகின்றோம். இந்நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு முதியோர் நலன்புரி மாதிரியொன்ற, தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதனைப் பின்வருமாறு வலையலமப்புச் செய்து அமுற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதியோர்களைச் சமுதாயத்தின் செயலூக்கமான அங்கத்தவர்களாக உருவாக்குவதற்கும்அவர்களை, தனிமை மற்றும் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து விடுவித்துக் கொள்ளுவதற்குமென புதிய வழி வகைகளைத் திறப்பதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேசப் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. தேசத்தின் நிர்மாணிப்பாளரான பெருமைகொள்ளக்கூடிய எமது முதியோர் சந்ததிக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நலன்புரியினை வழங்குவதற்கு எம் மூலம் இடம்பெற்று வரும் உன்னத பணிக்குப் பங்களிப்புச் செய்வதற்கு உங்களுக்கும் வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. இப்பராமரிப்பினை வெற்றிகரமாக்குவதற்கு உங்களின் நன்கொடைகளை இப்பணிகளுக்கு வழங்குவதற்கு உங்களுக்கு இத்தால் அழைப்பு விடுக்கின்றோம்.

தலைமைப்பீடம்


திரு. தயா கமகே

கௌரவ அமைச்சர்
ஆரம்பக் கைத்தொழில் மற்றும்  சமூக வலுவூட்டல் அமைச்சு.

திருமதி. அசோகா அலவத்த

செயலாளர்
ஆரம்பக் கைத்தொழில் மற்றும்  சமூக வலுவூட்டல் அமைச்சு.

திரு. எஸ்.டி.உடவத்த

பணிப்பாளர்
முதியோர்களுக்கான தேசிய  செயலகம்.

திரு. எம்.கே.ஆர்.யு.கிரிசாந்த

உதவி பணிப்பாளர்
முதியோர்களுக்கான தேசிய செயலகம்.

எமது செயற்பாடுகள்


முதியோர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குதல்.

மேலதிக விபரங்களைப் பார்க்கவும்

முதியோர்களினைப் மகிழ்ச்சிப்படுத்தல்.

மேலதிக விபரங்களைப் பார்க்கவும்

வைத்திய உதவி நிகழ்ச்சித் திட்டம்

மேலதிக விபரங்களைப் பார்க்கவும்

View More Items